#ஆல் அல்லது #ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
► மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
► இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப்பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.
► ஒரு ஆல மரம் தன்னை சுற்றி 6 கிலோ மீட்டர் தொலைவு வரை ஆக்ஸிஜனை வெளியிடுவதாக ஒரு ஆய்வின் தகவல்
► பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும். தியானம்கூடிவிடும. இது அனுபவ பூர்வமான உண்மை.
► இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமைஉண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார்என்று நம் முனோர் அறிந்திருந்தனர் .
► ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும்மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
► பொதுவாக ஆலமரம் என்றால் Ficus benghalensisஎனும் இனத்தையே குறிக்கும்
► ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது. கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம்திடப்படும். ஞாபகமறதி நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
► ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.
பூக்கள்:
► பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்.
விழுதுகள்:
► தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில்மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
இலைகள்:
► ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
► ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக்குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.
► சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில்இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர்மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.
► வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவுவெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும்,ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.
► புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும்.கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
► மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.
► கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப்போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்திபவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம்,சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.
► வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.
► ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.
► ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டிஅதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.
ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக்குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.
► ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில்உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.
► ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல்உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.
► ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இதுகாது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்கபயன் தருகிறது.
► ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால்புண்கள் ஆற விடுகின்றது.
► வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால்குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும்கிடைக்கும்.
ஆலமரத்தின் மருத்துவ குணங்கள் ;
► ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.
► சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.
► ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.
► ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது
► மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது.
► வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.
மூலநோய் குணமாகும் :
► ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும் :
► ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்தபொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும். சிறுவர்கள் முதல்பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.
தசை வலி நீங்கும் :
► ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது.
► பல்வலி போக்கும், பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்…
நன்றி,
No comments:
Post a Comment